திருமுருகண்டி A9 வீதியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் எல்லைக்குட்பட்ட திருமுருகண்டி பகுதியில் உள்ள A9 பிரதான வீதியில் நேற்று (15) மோட்டார் சைக்கிள் ஒன்று காருடன் மோதியதில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரில் ஒருவர் கடுமையான காயங்களுடன் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் உயிரிழந்தார். மற்ற நபர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து தொடர்பாக காரை ஓட்டிய திருகோணமலையைச் சேர்ந்த வைத்தியரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், சம்பவம் குறித்து மாங்குளம் பொலிஸ் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறத
Tags:
இலங்கை
