78வது சுதந்திர தினம்: யாழ் பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடி
இலங்கையின் 78-ஆவது சுதந்திர தினம் இன்று புதன்கிழமை (04) அனுசரிக்கப்படும் நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டது.
இலங்கை அரசின் சுதந்திர தினம் தமிழ் மக்களுக்கு கரிநாளாகும் என்ற நிலைப்பாட்டை அரசாங்கத்திற்கு வெளிப்படுத்தும் நோக்கில் இந்த கறுப்புக் கொடி ஏற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுசரிக்குமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முன்னதாக அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக இன்று பல்கலைக்கழக வளாகத்தில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.
Tags:
இலங்கை
.png)