அடுக்குமாடியில் இருந்து விழுந்த சீமெந்து கலவை – 7 வயது சிறுவன் உயிரிழப்பு
கொழும்பு – முகத்துவாரம் பகுதியில் அமைந்துள்ள ஹெலமுத்து செவன தொடர்மாடி குடியிருப்பில் இருந்து உடைந்து விழுந்த சீமெந்து கலவையால் 7 வயது சிறுவன் கடுமையாக காயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
முகத்துவாரத்தில் உள்ள குறித்த அடுக்குமாடி குடியிருப்பின் 7-ஆவது மாடியில், இரண்டு வீடுகளுக்கிடையில் இருந்த சீமெந்து கலவை நேற்று (04) காலை திடீரென உடைந்து கீழே விழுந்துள்ளது. அந்த நேரத்தில் கடைக்கு சென்று கொண்டிருந்த 7 வயதுடைய சிறுவனின் தலையில் குறித்த சீமெந்து கலவை விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவன், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக கட்டிடத்தின் உறுதித்தன்மை மற்றும் பராமரிப்பு குறைபாடுகள் குறித்து காவல்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
மேலும், இந்த ஹெலமுத்து செவன தொடர்மாடி குடியிருப்பு 2019ஆம் ஆண்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டதாகவும் குறிப்பிடத்தக்கது.
.png)