வவுனியாவில் சுகாதார குறைபாடுகளுடன் இயங்கிய 6 உணவகங்கள் மூடல்

வவுனியா நகரப் பகுதியில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாமல் இயங்கி வந்த ஆறு பிரபல உணவகங்கள் சுகாதார பரிசோதகர்களால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

நடைபெற்ற சோதனைகளின் போது, குறித்த உணவகங்களில் கடுமையான சுகாதார குறைபாடுகள் காணப்பட்டதாக பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தேவையான திருத்தப் பணிகளை மேற்கொள்ளும் வகையில், எதிர்வரும் 14 நாட்களுக்கு அவை மூடப்பட வேண்டும் என சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

குறிப்பாக, கொறவப்பொத்தானை வீதியில் இயங்கிய இரண்டு உணவகங்கள், பழைய பேருந்து நிலையப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பிரபல சைவ உணவகம் மற்றும் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்கு அருகாமையில் உள்ள சில உணவகங்களே இந்த நடவடிக்கைக்குட்படுத்தப்பட்டுள்ளன.