3700 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைந்தது
3700 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் இன்று முற்பகல் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கப்பலில் கொண்டு வரப்பட்டுள்ள எரிவாயு, இன்று இரவு விநியோகப் பிரிவுக்கு ஒப்படைக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில், நாளை முதல் நாடு முழுவதும் தொடர்ச்சியாக எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஆனால், எரிவாயு கொள்கலன்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலை காரணமாக பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், போதிய அளவில் எரிவாயு கொள்கலன்கள் கிடைக்காததே தற்போதைய எரிவாயு தட்டுப்பாட்டுக்கான முக்கிய காரணம் என விநியோகஸ்தர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Tags:
இலங்கை
