தனோவிட்ட பகுதியில் விபத்து – 21 வயது இளைஞர் உயிரிழப்பு
கம்பஹா – தனோவிட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, எதிர்த் திசையில் வந்த பஸ் ஒன்றுடன் மோதியதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இருவர் கடுமையாக காயம்
விபத்து நேரத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் கடுமையாக காயமடைந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற இளைஞர் உடனடியாக வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தம்புள்ளை பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதற்கிடையில், விபத்தில் காயமடைந்த பெண் பயணி முதலில் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து தனோவிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
