இலங்கையில் தங்க விலை மீண்டும் உயர்ந்தது

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (22) சிறிய அளவில் உயர்வைக் கண்டுள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று (21) காலை கொழும்பு செட்டியார் வீதி தங்கச் சந்தையில், 22 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ. 366,300 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

சமீபத்திய சந்தை நிலவரங்களின்படி, இன்று தங்கத்தின் விலை சுமார் ரூ. 6,000 அளவில் உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதன்படி,

24 கரட் தங்கம் 1 கிராம் ரூ. 50,800 ஆகவும், ஒரு பவுண் ரூ. 406,400 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், 22 கரட் தங்கம் 1 கிராம் ரூ. 46,560 ஆகவும், ஒரு பவுண் ரூ. 372,480 ஆகவும் உள்ளது.

21 கரட் தங்கம் 1 கிராம் ரூ. 44,460 ஆகவும், ஒரு பவுண் ரூ. 355,680 ஆகவும் விலை நிலவுகிறது.