தங்க விலை வரலாறு காணாத உயர்வு
கொழும்பு செட்டியார்தெரு சந்தைத் தகவல்களின்படி, இன்று (29.01.2026) 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 3,86,400 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதே நேரத்தில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 4,20,000 ரூபாவாக நிலவுகிறது என தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், இந்தியாவில் சென்னையில் இன்று தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க உயர்வு பதிவாகியுள்ளது. அங்கு ஒரு சவரன் தங்கத்தின் விலை 9,520 ரூபா உயர்ந்து 1,34,400 ரூபாவாகவும், ஒரு கிராம் தங்கத்தின் விலை 1,190 ரூபா அதிகரித்து 16,800 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
உலக சந்தை நிலவரம்
மேலும், உலக தங்க சந்தை வரலாற்றில் முதல் முறையாக, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,500 அமெரிக்க டொலர்களை கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று (29) காலை நிலவரப்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,579 அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது.
இதற்கு முன், நேற்று (28) காலை ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,164 அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
.png)