முல்லைத்தீவில் நள்ளிரவில் பயங்கரம்: தலையில் பலத்த காயங்களுடன் நபர் சடலமாக மீட்பு - கொலையா?
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பகுதியில், தலையில் காயங்களுடன் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
கரடிப்புலவு பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்தில், அவருக்குச் சொந்தமான துவிச்சக்கர வண்டியும் அருகில் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், குறித்த நபர் துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்த போது, பின்னால் இருந்து எவரேனும் தாக்கியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்த நபரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
இலங்கை
.png)