இன்று நாட்டின் பல பாகங்களில் மழை மற்றும் இடியுடன் கூடிய வானிலை - வளிமண்டலவியல் திணைக்களம்
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுடன் மாத்தளை, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடிய நிலை காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. குறிப்பாக, ஊவா மாகாணம் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றரை விட அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நாட்டின் ஏனைய பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களுடன் காலி, மாத்தறை மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களின் சில பகுதிகளில் அதிகாலை நேரங்களில் பனிமூட்டமான வானிலை நிலவலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் காலங்களில், தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
Tags:
இலங்கை
.png)