சிலை திறப்பு நிகழ்விற்கு சென்ற எம்பி சிறீதரனின் வாகனம் விபத்து


 இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவரும் யாழ்ப்பாண மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா அவர்களின் திருவுருவச் சிலை யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் இன்று (31) திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இந்த சிலை திறப்பு நிகழ்வில் பங்கேற்பதற்காகச் சென்றுகொண்டிருந்த சிறீதரன் நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனம், புத்தூர் சந்திப் பகுதியில் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்பாராத வகையில் பாதையின் குறுக்கே மூன்று பேர் பயணித்த மோட்டார் சைக்கிள் வந்ததன் காரணமாக, அது எம்பியின் வாகனத்துடன் மோதியதன் விளைவாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன், அவர்கள் சிறீதரன் எம்பியின் வாகனத்தின் மூலமே வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதேவேளை, எம்பியின் வாகனத்திற்கு சிறிய அளவிலான சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.