ஜனாதிபதியின் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு


 பல முக்கிய சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டு, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களால் அதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தலின் கீழ், மின்சார விநியோகத்துடன் தொடர்புடைய அனைத்து நடவடிக்கைகள், எரிபொருள் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள், எரிவாயு வழங்கல் மற்றும் விநியோகம், வைத்தியசாலைகள் மற்றும் மருந்தக சேவைகள், மேலும் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட பல துறைகள் அத்தியாவசிய சேவைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.