உலக சந்தையில் தங்க விலை மீண்டும் வீழ்ச்சி – இலங்கையிலும் தாக்கம்
கடந்த நாட்களில் உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,500 அமெரிக்க டொலர்களை கடந்திருந்த நிலையில், இன்று (31) நிலவரப்படி அது 4,893.2 அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளது.
நேற்றைய (30) விலையுடன் ஒப்பிடுகையில், தங்கத்தின் விலை 434.45 அமெரிக்க டொலர்கள் குறைந்து, 8.15 சதவீத வீழ்ச்சியாக பதிவாகியுள்ளது.
அதேபோல், வெள்ளியின் விலையும் குறிப்பிடத்தக்க அளவில் சரிவடைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி ஒரு அவுன்ஸ் வெள்ளி 85.34 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதுடன், இது முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது 29.16 அமெரிக்க டொலர்கள் குறைந்து 25.46 சதவீத வீழ்ச்சியை காட்டுகிறது.
இதன் விளைவாக, கடந்த 48 மணி நேரத்திற்குள் தங்கம் மற்றும் வெள்ளி சந்தைகளில் இருந்து சுமார் 15 டிரில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவிலான முதலீடுகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச வர்த்தக செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இலங்கை சந்தை நிலவரம்
உலக சந்தையில் ஏற்பட்ட விலை வீழ்ச்சியின் தாக்கம் காரணமாக, உள்ளூர் சந்தையிலும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு பவுண் ரூ.380,000 ஆகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு பவுண் ரூ.349,600 ஆகவும் விற்பனையாகி வருகின்றது.
.png)