தொலைபேசி தொடர்பான தகராறு – 14 வயது சிறுமி உயிரிழப்பு
தொலைபேசி தொடர்பான விவகாரத்தில் நேற்று (30) இரவு ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, தந்தை தனது மகளை தாக்கியதில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் உரகஸ்மங்ஹந்திய, தெல்கடை பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி ஆவார்.
முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், தந்தை–மகள் இடையே ஏற்பட்ட தகராறின் போது தந்தை கூர்மையான ஆயுதம் பயன்படுத்தியதாகத் தெரியவந்துள்ளது. காயமடைந்த நிலையில் சிறுமி எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சந்தேகத்தின் பேரில் தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சிறுமியின் உடல் எல்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து உரகஸ்மங்ஹந்திய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
.png)