நிபா வைரஸ் அச்சுறுத்தல் இல்லை: சுகாதார அமைச்சு உத்தியோகபூர்வ அறிவிப்பு!
இலங்கையில் நிபா (Nipah) வைரஸ் தொற்று பரவும் அபாயம் ஏதுமில்லை என சுகாதார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
ஒருவேளை இந்நோய் அடையாளம் காணப்பட்டால், அதனை எதிர்கொள்வதற்குத் தேவையான அனைத்துத் தற்காப்பு நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) பரிந்துரைகளுக்கு அமைய, நாட்டில் உரிய கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
காலத்திற்குக் காலம் ஏற்படும் வைரஸ் தொற்றுகள் குறித்து தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (MRI) தொடர்ச்சியான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும், அதன் அடிப்படையில் சிகிச்சைகள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இந்தியாவிலிருந்து அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த போதிலும், இந்தியாவில் பதிவாகியுள்ள நிபா வைரஸ் தொற்று குறித்து இலங்கை மக்கள் அச்சமடையத் தேவையில்லை என பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
.png)