சிறிலிய கணக்கு விவகாரம்: விசாரணைக்கு சமூகமளிக்காமல் அவகாசம் கோரிய மஹிந்தவின் மனைவி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, தனிப்பட்ட காரணங்களுக்காக இன்று (27) பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாக முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
வங்கி கணக்கு தொடர்பான விசாரணையில் வாக்குமூலம் அளிக்க அழைக்கப்பட்டிருந்த அவர், இதற்காக இரண்டு வார கால அவகாசம் கோரியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில், 'சிறிலிய' (Siriliya) எனும் பெயரில் பயன்படுத்தப்பட்ட வங்கி கணக்கு ஒன்றில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல்கள் குறித்து பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இது தொடர்பான மேலதிக வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்ளவே இன்று செவ்வாய்க்கிழமை (27) அவர் அழைக்கப்பட்டிருந்தார்.
தற்போது அவர் கால அவகாசம் கோரியுள்ள நிலையில், விசாரணைகளுக்காக அவர் ஆஜராக வேண்டிய அடுத்த திகதி குறித்து பொலிஸார் விரைவில் தீர்மானிக்க உள்ளனர்.
Tags:
இலங்கை
.png)