இலங்கையில் குறைந்த தங்கத்தின் விலை: இன்றைய சந்தை நிலவரம்

உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலைகளின் தாக்கத்தால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக ஏற்றத் தாழ்வுகளை சந்தித்து வரும் நிலையில், இன்று இலங்கையில் தங்க விலையில் குறைவு பதிவாகியுள்ளது.

அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்ட தகவலின்படி, நேற்று (26) 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 400,000 ரூபாய்க்கு அருகிலா விலையில் விற்பனையாகியிருந்த நிலையில், இன்று அதன் விலை பவுண் ஒன்றுக்கு 3,000 ரூபாயால் குறைந்துள்ளது.

இதன்படி, இன்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 397,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேவேளை, 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 367,200 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தற்போதைய நிலவரப்படி,

24 கரட் தங்கம் – ஒரு கிராம்: 49,625 ரூபாய்
22 கரட் தங்கம் – ஒரு கிராம்: 45,900 ரூபாய்