திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: 10 சந்தேகநபர்களுக்கு பெப்ரவரி 02 வரை விளக்கமறியல்


 திருகோணமலை புத்தர் சிலை தொடர்பான வழக்கில், வண. பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் மேலும் ஆறு பேர் என மொத்தம் 10 சந்தேகநபர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார். அதன்படி, சம்பந்தப்பட்ட சந்தேகநபர்கள் அனைவரும் எதிர்வரும் பெப்ரவரி 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளனர்.

இவ்வழக்குடன் தொடர்புடையதாக ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வண. பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பிக்குகள் மற்றும் பிற சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, மேலதிகமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.