பண்டத்தரிப்பு கொல்களம் காணி இராணுவத்திடமிருந்து விடுவிப்பு

 

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள பிரதேச சபையின் கொல்களம் காணி, 2012 ஆம் ஆண்டிலிருந்து இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த நிலையில், தற்போது அந்த இடத்தை இராணுவத்தினர் முழுமையாக விட்டு வெளியேறியுள்ளனர்.

அங்கு கடமையாற்றிய இராணுவத்தினர் அராலி இராணுவ முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, குறித்த காடாப்புலம் காணி இன்று புதன்கிழமை சண்டிலிப்பாய் பிரதேச செயலாளரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.