இலங்கைக்கு வருகைதரும் வெளிநாட்டவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

இலங்கைக்கு (Sri Lanka) வருகை தரும் அனைத்து வெளிநாட்டினரும், வருகைக்கு முன் மின்னணு பயண அங்கீகாரம் (ETA) பெறுவது நாளை (15) முதல் கட்டாயமாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், இலங்கைக்கு வந்தவுடன் இலவச சுற்றுலா விசாவிற்கு தகுதி பெறும் நாடுகளைச் சேர்ந்த பயணிகளும், இத்திட்டத்தின் கீழ் வருவதற்கும், ETA அனுமதி பெற்றிருக்க வேண்டியது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இலங்கையை நோக்கி பயணிக்குமாறு அமெரிக்கா வெளியுறவுத்துறை வெளியிட்டிருந்த ஆலோசனையை புதுப்பித்துள்ளது.  

இது, இரண்டாம் கட்ட பயண ஆலோசனை (Level 2 Travel Advisory) ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.