மின்சாரக் கட்டணம் தொடர்பில் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு!
2025 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் காலாண்டு மின்சாரக் கட்டணத்தில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்று (14) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், தற்போதைய மின்சாரக் கட்டணங்களை மாற்றமின்றி தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மின்சாரக் கட்டணங்களில் திருத்தம் அடுத்த மூன்று மாதங்களுக்கு எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கே.பி.எல். சந்திரலால் தெரிவித்துள்ளார்.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏற்பாடு செய்திருந்த விசேட ஊடக சந்திப்பின் போது அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
Tags:
இலங்கை