இலங்கையில் பிறப்புச்சான்றிதழ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பெற காத்திருப்போருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
அரசாங்கத்தின் Lanka Government Cloud (LGC) அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, பல முக்கிய அரச இணைய சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த கோளாறு குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, பதிவாளர் நாயக திணைக்களத்தின் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புச் சான்றிதழ்களைப் பெறுதல், வாகன வருமான அனுமதிப்பத்திரங்களைப் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு இணையதள சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே, பிறப்புச் சான்றிதழ்களின் நகல்கள் தேவைப்படுபவர்கள், தங்களது அசல் சான்றிதழ் வழங்கப்பட்ட பிரதேச செயலகம் மூலம் தேவையான நகல்களை பெற்றுக்கொள்ள முடியும் என பதிவாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
Tags:
இலங்கை