கொழும்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.  

இதனை அடுத்து, கொழும்பு மாநகர சபை (CMC) அக்டோபர் 16ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை அவசரகால அனர்த்த மேலாண்மை நடவடிக்கைகளை அமலில் கொண்டு வருவதாக அறிவித்துள்ளது.

அதன்படி, பாதிப்புகளுக்கு உடனடி உதவியளிக்க மாநகர சபையின் அனர்த்த முகாமைத்துவ மற்றும் அவசரகால பதில் பிரிவுகள் முழுமையாக தயாராக உள்ளதாக சபை அறிவித்துள்ளது.  

வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகாண்பின்படி, பல பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்பதுடன், தற்காலிக வெள்ளப்பெருக்குகள் மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படும் அபாயமும் காணப்படுகின்றது.

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  

அத்துடன், அவசர நிலைகளில் உதவிகள் தேவைப்படும் போதோ, மேலதிக தகவல்களுக்கோ, கொழும்பு மாநகர சபையுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.  

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:  

- பொதுத் தொலைபேசி எண்: 011-2422222  

- அவசரத் தொலைபேசி எண்: 011-2686087  

இத்தகவலை மக்கள் அவசியமாக கவனத்தில் எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.