இலங்கையில் நான்கு இலட்சத்தை கடந்த தங்கவிலை!

உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று கணிசமான உயர்வைக் கண்டதையடுத்து, கொழும்பு செட்டியார் தெருவில் தங்கத்தின் விலை ரூ.400,000ஐ கடந்துள்ளது.  

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,233 அமெரிக்க டொலரைத் தொட்டுள்ளதால், உள்ளூர் சந்தையிலும் விலை உயர்வு பதிவாகியுள்ளது.  

இதன் விளைவாக, செட்டியார் தெரு விற்பனை நிலவரப்படி இன்று 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை ரூ.400,000ஐ அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.