இலங்கையில் தொடர்ந்து அதிகரிக்கும் தங்கவிலை!

இன்று நாட்டில் தங்கத்தின் விலை  (15.10.2025) முன்னேற்றம் காட்டியுள்ளது.  

நேற்றைய தினத்துடன் (14.10.2025) ஒப்பிடுகையில், இன்றைய தினம் தங்கத்தின் விலை ரூ.5,000 இனால் உயர்ந்துள்ளது.  

அதன்படி, கொழும்பு செட்டியார் தெருவில் பதிவான இன்றைய (15) காலை விலை நிலவரப்படி, 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை ரூ.342,300 ஆக அதிகரித்துள்ளது.  

நேற்றைய தினத்தில் இதே 22 கரட் பவுண் தங்கத்தின் விலை ரூ.337,600 ஆக காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நேற்று (14.10.2025) ரூ.365,000 ஆக இருந்த 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை, இன்று (15.10.2025) ரூ.370,000 ஆக அதிகரித்துள்ளது.  

இதன்படி, ஒரு நாளுக்குள் 24 கரட் தங்கத்தின் விலை ரூ.5,000 இனால் உயர்வடைந்துள்ளது.

எதிர்வரும் சில தினங்களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்கத்திற்கு தேவை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால், தங்கத்தின் விலை மேலும் உயரும் என்ற அபாயம் இருப்பதாக தங்க நகை வியாபாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.