நாட்டில் தேங்காய் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்!
இலங்கையில் தேங்காய்களின் சராசரி விலை 6.8 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, ஆயிரம் தேங்காய்களின் சராசரி விலை ரூ.138,582 ஆக பதிவாகியுள்ளது. இருப்பினும், வாராந்த தேங்காய் ஏல விற்பனையில் அதிகபட்சம் அல்லது குறைந்தபட்சமாக பதிவான விலைகள் குறிப்பிடப்படவில்லை.
இதனிடையே, உள்நாட்டு சந்தையில் பெரிய தேங்காய் ஒன்றின் மொத்த விலை ரூ.180 முதல் ரூ.190 வரையும், சிறிய தேங்காய் ஒன்றின் மொத்த விலை ரூ.150 முதல் ரூ.170 வரையும் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
இலங்கை