அஸ்வெசும பயனாளிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
அஸ்வெசும் நலன்புரித் திட்டத்தின் கீழ், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 23,775 பயனாளி குடும்பங்களுக்கு நிதி மானியம் வழங்கும் முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக ரூ.150,000 வரையிலான இந்த நிதி உதவித் தொகை, வணிக நடவடிக்கைகள் அல்லது வேலைவாய்ப்புத் திட்டங்களை ஊக்குவித்து, வறுமையில் வாழும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வழங்கப்படுகிறது.
2025 முதல் 2027 வரையிலான இந்த வேலைத்திட்டம், 143 பிரதேச செயலக பிரிவுகளுக்கும், 839 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கும் உட்பட்ட பகுதிகளை உள்ளடக்கியதாகும்.
மேலும், அஸ்வெசும் நலன்புரி உதவித் திட்டத்தின் கீழ் சலுகைகளைப் பெற்றுவரும் 1.2 மில்லியன் வறிய குடும்பங்களை வலுப்படுத்தும் பொறுப்பு, சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் முன்னோடிப் பரிமாணங்கள், ஆசிய அபிவிருத்தி வங்கியும், உலக வங்கியும் வழங்கும் நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன.