பலத்த மின்னல் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை!
பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படும் அபாயம் இருப்பதால், வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (03) இரவு 11 மணி வரை செல்லுபடியாகும் வகையில் எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படும் அபாயம் இருப்பதால், வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (03) இரவு 11 மணி வரை செல்லுபடியாகும் வகையில் எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்களுடன், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பலத்த மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை நேரங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசும் சாத்தியமும் உள்ளதனால், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.