மட்டக்களப்பில் இடம்பெற்ற கோர விபத்து : பலர் வைத்தியசாலையில்
மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (23.10.2025) இடம்பெற்ற விபத்தில் ஏழு பேர் தீவிரமாக காயமடைந்துள்ளனர்.
விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் பொலிஸாரால் விசாரணை செய்யப்படுகின்றன.

குறித்த பகுதியில் பயணித்த டிப்பர், மட்டக்களப்பிலிருந்து பொலன்னறுவை நோக்கி சென்ற வேன் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் கடுமையாக காயமடைந்த 7 பேர், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்ச்சியாக பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.