யாழிற்கு தொடருந்தில் பயணிக்கவுள்ளவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

வவுனியா மற்றும் ஓமந்தை இடையிலான தொடருந்து பாதையில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகளினால், கொழும்பு கோட்டை முதல் காங்கேசன்துறை வரை இயக்கப்படும் யாழ்தேவி தொடருந்து சேவை தாமதமடையக்கூடும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஒக்டோபர் 7 ஆம் திகதியிலிருந்து, கொழும்பு கோட்டையிலிருந்து காலை 6.40 மணிக்கு புறப்படும் யாழ்தேவி தொடருந்து, காலை 11.35 மணிக்கு வவுனியாவை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், குறித்த தொடருந்து வவுனியா தொடருந்து நிலையத்தில் 2 மணி மணி நேரம் மற்றும் 40 நிமிடங்கள் நிறுத்தப்பட்ட பிறகு, பிற்பகல் 2.15 மணிக்கு பயணத்தைத் தொடரும். இந்த பயண அட்டவணை தொடர்ந்து 11 நாட்கள் நடைமுறையில் இருக்கும்.

இதற்கிடையில், யாழ்தேவி தொடருந்து எண் 4078, அதே காலப்பகுதியில் 30 நிமிடங்கள் தாமதமாக, வழக்கமான நேரத்தை விட காலை 11.00 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து புறப்படும்.

இந்த காலக்கட்டத்தில் முன்பதிவுகளை இரத்து செய்ய விரும்பும் பயணிகளுக்கு, அவர்களது கட்டணத்தை முழுமையாகத் திரும்பப் பெறும் உரிமை வழங்கப்படும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.