இலங்கையில் தொடர் மாற்றமடையும் தங்கவிலை!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகின்றது.  

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, இன்று (01.10.2025) மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

இன்றைய நிலவரத்தின்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ரூ.1,172,282 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், 24 கரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ.41,360 ஆகவும், 24 கரட் தங்கத்தின் ஒரு பவுண் (8 கிராம்) விலை ரூ.330,850 ஆகவும் இன்று பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ.37,920 ஆகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு பவுண் (8 கிராம்) விலை ரூ.303,350 ஆகவும் பதிவாகியுள்ளது.  

அதேவேளை, 21 கரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ.36,190 ஆகவும், 21 கரட் தங்கத்தின் ஒரு பவுண் விலை ரூ.289,550 ஆகவும் இன்று (01.10.2025) பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் (8 கிராம்) விலை ரூ.306,000 ஆக பதிவாகியுள்ளது.

அங்கு 22 கரட் தங்கப் பவுண் (8 கிராம்) விலை ரூ.283,000 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.