உலகில் சுற்றுலாவுக்கு பார்வையிட சிறந்த 25 நகரங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் (Jaffna) உலகில் பார்வையிட சிறந்த 25 நகரங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு, உலகப் புகழ்பெற்ற பயண ஊடக நிறுவனம் லோன்லி பிளானட் வெளியிட்ட ‘Best in Travel 2026’ பட்டியலில் இடம்பிடித்து, இத்தாலியின் மிலனில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த சர்வதேச அங்கீகாரம், இலங்கையின் சுற்றுலா துறைக்கு ஒரு முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, யாழ்ப்பாணத்தின் கலாசார மரபுகள், உணவு, வரலாறு மற்றும் மக்களின் பாரம்பரிய hospitaliy ஆகியவை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளதாக விளக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் இந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பது, அதன் தனித்துவமான கலாச்சார மற்றும் வரலாற்று செழுமையை வெளிப்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மிலானிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகம், இந்த நிகழ்வில் பங்கேற்றதோடு, வரவேற்பை சிறப்பிக்கும் வகையில் வட மாகாணத்தின் தனித்துவமான பாரம்பரிய உணவுகளை அணிமுகப்படுத்தியது.
இந்த வகைபோன்ற சர்வதேச அங்கீகாரம், இலங்கையின் உலகளாவிய ஈர்ப்பை மேம்படுத்துவதோடு, சுற்றுலாப் பயணிகளின் வருகையையும் வளர்த்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இது சமூக அடிப்படையிலான சுற்றுலா அனுபவங்களை ஊக்குவிக்கும் வகையில், ஒரு சக்திவாய்ந்த சந்தைப்படுத்தல் உத்தியாகவும் விளங்கும் எனக் கருதப்படுகிறது.
அதன்படி, லோன்லி பிளானட்டின் மதிப்பீட்டின்படி, 2026 ஆம் ஆண்டு பார்வையிட மிகவும் சிறந்த 25 இடங்கள் வருமாறு வெளியிடப்பட்டுள்ளன.
இந்த பட்டியலில், லோன்லி பிளானட் நிறுவனம் 2026-ஆம் ஆண்டில் உலகில் பார்வையிட சிறந்த 25 இடங்களில் யாழ்ப்பாணம் (Jaffna) இரண்டாவது இடத்தையும், பிரிட்டிஷ் கொலம்பியா, கனடா 12வது இடத்தையும் பெற்றுள்ளன.
இந்த வகைபடுத்தல் சுற்றுலா, கலாச்சாரம், இயற்கை அழகு, பன்முகத்தன்மை மற்றும் தரமான பயண அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்டதாகக் கருதப்படுகிறது.
