இன்று யாழ் உரும்பிராய் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து
யாழ்ப்பாணம் பலாலி வீதியின் உரும்பிராய் பகுதியில், கற்பக பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் இன்று (09) ஒரு விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது.
உந்துருளி மற்றும் மகிழுந்து ஒன்றின் மோதலால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தின்போது, உந்துருளி மற்றும் மகிழுந்து பகுதியளவில் சேதமடைந்துள்ளன. உந்துருளியில் பயணித்தவர் சிறிய காயங்களுடன் உயிர்தப்பியுள்ளார்.
இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய மேலதிக விசாரணைகள் கோப்பாய் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Tags:
இலங்கை