இலங்கையில் வரலாறு காணாத வகையில் உச்சந்தொட்ட தங்கவிலை
இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் சீரற்ற மாற்றங்கள் காணப்பட்ட நிலையில், இன்று (09) அதன் விலை திடீரென அதிகரித்துள்ளது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.39,000 ஆகவும், ஒரு பவுனுக்கு (8 கிராம்) ரூ.312,000 ஆகவும் பதிவாகியுள்ளது.
அதேவேளை, 22 கரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.35,750 ஆகவும், ஒரு பவுனுக்கு ரூ.286,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், 21 கரட் தங்கத்தின் விலை, ஒரு கிராமுக்கு ரூ.34,130 ஆகவும், 1 பவுன் (8 கிராம்) ரூ.273,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, உலக சந்தை நிலவரத்தின்படி, இலங்கையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் பெறுமதி ரூ.1,105,498 ஆக பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.