யாழில் இடம்பெற்ற விபத்தில் ஐவருக்கு காயம்
யாழ்ப்பாணம் - மருதனார்மடம், காங்கேசன்துறை வீதியில் இன்று (09) மூன்று உந்துருளிகள் மற்றும் ஒரு துவிச்சக்கர வண்டி ஒன்றைச் சேர்ந்த வாகனங்கள் மோதியதில், விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வீதியில் பயணித்துக் கொண்டிருந்த துவிச்சக்கர வண்டி ஒன்று வீதியை கடக்க முற்பட்ட வேளையில், பின்புறத்தில் இருந்து வந்த உந்துருளி ஒன்று அதனை மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பின்னர், நிலைதவறிய அந்த உந்துருளி வலது பக்கம் செல்கின்றபோது, எதிர்வரும் இரண்டு உந்துருளிகளுடன் மோதியதால் விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் ஐந்து பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
