மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலைதயில் நடிகர் ரோபோ ஷங்கர் காலமானார்
சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் கவனம் பெற்ற ரோபோ ஷங்கர், பின்னர் வெள்ளித்திரையில் பிரபலமான காமெடி நடிகராக வளர்ந்தார்.
சில வருடங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட அவர், அண்மையில் உடல்நிலை தீவிரமாக பாதிக்கப்பெற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த துயரமான செய்தி திரையுலகத்தையும், அவரை நேசித்த ரசிகர்களையும் மிகவும் வாடவைத்துள்ளது.
Tags:
இலங்கை