நாட்டில் வரலாறு காணாத வகையில் தங்கவிலையில் தொடர் அதிகரிப்பு!
இலங்கையில் இன்று (23) ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.1,800 உயர்ந்துள்ளதனால், நகை விரும்பிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரத்தின்படி, தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் நேற்றைய தினம், 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.277,500 ஆகவும், 24 கரட் தங்கத்தின் விலை ரூ.300,000 ஆகவும் பதிவாகியிருந்தது.
இந்நிலையில், இன்றைய (23) தினம் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.279,300 ஆகவும், 24 கரட் தங்கத்தின் விலை ரூ.302,000 ஆகவும் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய, இன்று தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்ச நிலையை எட்டியுள்ளது.
அதேவேளை, கடந்த மாதத்தின் ஆரம்பத்தில் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.257,200 ஆகவும், 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.278,000 ஆகவும் காணப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.