திருகோணமலையில் உணரப்பட்ட நிலநடுக்கம்
திருகோணமலை கடற்கரை பகுதியில் 3.9 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
திருகோணமலை கடற்கரையை ஒட்டிய கடல் பகுதியில் வியாழக்கிழமை (18) மாலை 4.06 மணியளவில் 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானதாக இலங்கை புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
GSMBயின் நில அதிர்வு கண்காணிப்பு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், திருகோணமலையிலிருந்து வடகிழக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடற்பரப்பில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அதற்கான பதிவுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மகாகனதராவ, ஹக்மான, பல்லேகலே மற்றும் புத்தங்கல ஆகிய இடங்களில் அமைந்துள்ள நாட்டின் நான்கு நில அதிர்வு கண்காணிப்பு நிலையங்களிலும் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இதனுடன், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அபாயம் எதுவும் இல்லை எனவும், கடற்கரைப்பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும், பேரிடர் மேலாண்மை மையம் (DMC) அறிவித்துள்ளது.
.jpeg)