இலங்கையில் அதிரடியாக குறைந்த தங்கவிலை!
இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் மாற்றமடைந்து வந்த நிலையில், தற்போது தங்கத்தின் விலையில் சடுதியான மாற்றம் காணப்படுகின்றது.
இன்றைய தினமான (17.09.2025) நிலவரத்தின்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ரூ.1,113,266 ஆக பதிவாகியுள்ளது. அத்துடன், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.39,270 ஆகவும், ஒரு பவுன் (8 கிராம்) விலை ரூ.314,200 ஆகவும் இன்றைய தினம் (17.09.2025) பதிவாகியுள்ளது.
அதேபோல், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.36,000 ஆகவும், ஒரு பவுன் (8 கிராம்) விலை ரூ.288,000 ஆகவும் இன்றைய தினம் (17.09.2025) பதிவாகியுள்ளது. 21 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.34,370 ஆகவும், ஒரு பவுன் (8 கிராம்) விலை இன்றைய தினம் (17.09.2025) ரூ.274,900 ஆகவும் பதிவாகியுள்ளது.
உலக சந்தையின் இன்றைய (17.09.2025) நிலவரப்படி, இலங்கையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் பெறுமதி சுமார் ரூ.1,084,561.71 ஆக பதிவாகியுள்ளது.
இதேவேளை, சர்வதேச ஸ்பாட் தங்க விலை தற்போது ஒரு அவுன்ஸுக்கு அமெரிக்க டொலர் $3,690.59 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.