இலங்கையில் போராட்டத்தில் குதித்த மின்சார சபை ஊழியர்கள்
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புக்கு எதிராக, பொதுமக்களுக்கான சலுகைகளை குறைக்கும் வகையில் மின்சார சபையை ஐந்து தனி நிறுவனங்களாகப் பிரிக்கும் திட்டத்தை கண்டித்து, மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டம் இன்று (17) மின்சார சபை தலைமையகத்துக்கு முன்னால் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
மின்சார சபை தலைமையகத்தில் ஒன்று கூடிய அனைத்து ஊழியர்களும், இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புக்கு எதிராகவும், அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும் கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டனர்.
தலைமையகத்துக்கு முன் ஒன்று கூடிய ஊழியர்கள், பதாகைகளை ஏந்தி, அரசை கடுமையாக கண்டித்து கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Tags:
இலங்கை
