வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் அமைந்த நீர்ப்பிடிப்புப் பகுதிகளில், நேற்று (16) இரவு முதல் பெய்துவரும் கனமழை மற்றும் அடர்ந்த மூடுபனியின் தாக்கத்தால், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹட்டன்–நுவரெலியா மற்றும் ஹட்டன்–கொழும்பு பிரதான வீதிகள் உள்ளிட்ட கிளை வீதிகளில் கூடுதலாக அடர்ந்த மூடுபனி காணப்படுவதாகவும், இது சாலையினூடான பயணங்களை மேலும் சிரமமாக்குவதாகவும் கூறப்படுகிறது.

இந்த வீதிகளில் வாகனங்களை இயக்கும் போது, முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு, மெதுவாகவும் மிகுந்த கவனத்துடனும் செலுத்துமாறு சாரதிகளை கேட்டுக்கொண்டு, ஹட்டன் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.