இலங்கையில் புதிதாக உச்சந்தொட்ட தங்கவிலை!
இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்த தங்க விலை, இன்று (16.09.2025) மீண்டும் உயர்வாக பதிவாகியுள்ளது.
இன்றைய நிலவரப்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ரூ.1,114,058 ஆக பதிவாகியுள்ளது. அத்துடன், இன்றைய (16.09.2025) நிலவரத்தின் படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.39,300 ஆகவும், ஒரு பவுன் (8 கிராம்) விலை ரூ.314,400 ஆகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.36,030 ஆகவும், ஒரு பவுன் (8 கிராம்) விலை ரூ.288,200 ஆகவும் பதிவாகியுள்ளது.
மேலும், 21 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.34,390 ஆகவும், 21 கரட் தங்கப் பவுன் விலை இன்றையதினம் ரூ.275,100 ஆகவும் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.