இலங்கையில் வரலாறு காணாத வகையில் உச்சந்தொட்ட தங்கவிலை! அதிர்ச்சியில் மக்கள்
இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக அதிகரித்த தங்க விலை, இன்று (11.09.2025) மீண்டும் உயர்வாக பதிவாகியுள்ளது.
இன்றைய நிலவரப்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ரூ.1,100,481 ஆக நிலைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், இன்றைய (11.09.2025) நிலவரத்தின்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.38,820 ஆகவும், 24 கரட் தங்கத்தின் ஒரு பவுன் (8 கிராம்) விலை ரூ.310,550 ஆகவும் பதிவாகியுள்ளது.
அதேவேளை, இன்றைய (11.09.2025) நிலவரப்படி, 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.35,590 ஆகவும், ஒரு பவுன் (8 கிராம்) விலை ரூ.284,700 ஆகவும் பதிவாகியுள்ளது.
மேலும், 21 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.33,970 ஆகவும், 21 கரட் தங்கப் பவுன் விலை ரூ.271,750 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.