கொழும்பு மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
திருத்தப்பணிகள் காரணமாக, கொழும்பு மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை (06) காலை 10.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை 9 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அதற்கமைவாக, கொழும்பு 01 முதல் 15 வரை, பத்தரமுல்ல, பெலவத்த, கொஸ்வத்த, தலவத்துகொட, கோட்டை, இராஜகிரிய, மிரிஹான, மெதிவெல, நுகெகொடை, நாவல, மஹரகம, பொரலஸ்கமுவ, இரத்மலானை, தெஹிவளை மற்றும் மொரட்டுவை உள்ளிட்ட பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.
Tags:
இலங்கை