யாழிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற வேன் விபத்துக்குள்ளானதில் நால்வர் காயம்!
அநுராதபுரம் - ரம்பேவ ஏ9 பிரதான வீதியின் பரசன்கஸ்வெவ பகுதியில் இன்று (04) காலை இடம்பெற்ற விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக பரசன்கஸ்வெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பரசன்கஸ்வெவ பஸ் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸின் பின்புறத்தில், வேன் ஒன்று மோதியதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பரசன்கஸ்வெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தின் போது வேனில் பயணித்த நால்வர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பரசன்கஸ்வெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த விபத்துடன் தொடர்புடைய மேலதிக விசாரணைகள் பரசன்கஸ்வெவ பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.