இலங்கையில் 18 மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது,18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்கினார்.
இந்நிலையில், விசேட தர நீதித்துறை அதிகாரிகள் 17 பேரும், சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றும் சிரேஷ்ட அரசதரப்பு சட்டத்தரணி ஒருவரும் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நியமனங்கள், நீதித்துறை செயற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது.
Tags:
இலங்கை