நாட்டில் மீண்டும் உச்சத்தை தொட்ட தங்கவிலை
இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வரும் நிலையில், கடந்த சில நாட்களாக தொடர் உயர்வை பதிவு செய்த தங்க விலை இன்று (03.09.2025) மீண்டும் அதிகரித்துள்ளது.
அந்தவகையில், இன்றைய நிலவரப்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,071,021 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன், இன்று (03.09.2025) நிலவரப்படி 24 கரட் தங்கத்தின் விலை gr (1 கிராம்)க்கு 37,780 ரூபாவாகவும், 1 பவுண் (8 கிராம்)க்கு 302,250 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இன்றைய (03.09.2025) நிலவரப்படி, 22 கரட் தங்கத்தின் விலை 1 கிராம் ரூ.34,640 ஆகவும் 1 பவுண் (8 கிராம்) ரூ.277,100 ஆகவும் பதிவாகியுள்ளதுடன் 21 கரட் தங்கத்தின் விலை 1 கிராம் ரூ.33,060 ஆகவும் 1 பவுண் (8 கிராம்) ரூ.264,500 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.