இன்று வெளியாகவுள்ள புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (03) இரவு வெளியிடப்படலாம் என பரீட்சைகள் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி, பெறுபேறுகள் இன்று இரவில் வெளியிடப்படும் சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும், இறுதித் தீர்மானம் விரைவில் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஆகஸ்ட் 10ஆம் திகதி நாடளாவிய ரீதியில் நடைபெற்றது. மொத்தமாக 2,787 பரீட்சை மையங்களில் இப்பரீட்சை நடத்தப்பட்டது.
இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 3,07,959 என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Tags:
இலங்கை