அதிகாலையில் மத்திய அதிவேக வீதியில் இடம்பெற்ற கோர விபத்து
மத்திய அதிவேக வீதியின் 91ஆவது கிலோமீட்டர் தூண் அருகில் இன்று (03) அதிகாலை ஏற்பட்ட வாகன விபத்தில் இருவர் உயிரிழந்ததோடு, மற்றொருவர் கடுமையாக காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோதுமை மாவு ஏற்றிய லொறி மற்றும் பவுசர் வாகனம் மோதியதின்போது இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் லொறியின் சாரதியும், அவரது உதவியாளரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, லொறியின் அடிப் பகுதியில் சிக்கிய உதவியாளர், உடல் நசுங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார்.
Tags:
இலங்கை