நீர்வெட்டு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, நாளைய (06) நீர்வெட்டு தொடர்பாக அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, நாளை காலை 10.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை மொத்தம் 9 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும், இது கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு 01 முதல் கொழும்பு 15 வரை உள்ள அனைத்து பகுதிகளிலும் நாளைய (06) நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பத்தரமுல்ல, பெலவத்த, ஹோகந்தர, கொஸ்வத்த, தலவத்துகொட, கோட்டே, ராஜகிரிய, மிரிஹான, மாதிவெல, நுகேகொட, நாவல, கொலன்னாவ, கொட்டிகாவத்த, அங்கொட, வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்த, முல்லேரியா, மஹரகம, பொரலஸ்கமுவ, தெஹிவளை, ரத்மலானை மற்றும் மொரட்டுவ ஆகிய பகுதிகளிலும் நாளைய (06) நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.